Wednesday, 25 December 2013

சித்தர் இரசவாதம் - rasavatham secret art

சித்தர் இரசவாதம்  - rasavatham secret art


சித்தர் இரசவாதம் – Siddha Alchemy

சித்தர்கள் தங்கள் இறைஞானத்தால் கண்டறிந்த அரிய கலைகளில் இரசவாதமும் ஒன்று.

இரசவாதம் என்பது ஒரு உலோகத்தை மற்றொரு உலோகமாக மாற்றும் அதிசய கலையாகும்.அதாவது இரும்பு,செம்பு, பாதரசம் போன்றவைகளை உயர்ந்த உலோகமான தங்கமாக மாற்றும் கலையாகும்.

சித்தர்கள் ஏன் இக்கலையை ஆய்வு செய்தார்கள்.தங்கம் [GOLD] என்ற  உலோகத்தின் மீது உள்ள ஆசையினாலோ, பொன், பொருள் ஈட்டும் ஆர்வத்தினாலோ அல்ல.என்றும் உடலை அழிய விடாமல் காக்கும் காயகற்பம் என்ற அற்புத நிலையினை அடைவதற்காக.

மேற்கூறிய இரும்பு, செம்பு, பாதரசம் போன்றவை பஞ்சபூத சக்திகளான  நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் என்ற ஐந்து வித சக்திகளின் தாக்குதலுக்கு ஆட்பட்டு மெல்ல,மெல்ல அணுக்கள் சிதைவடைந்து அழிந்து கொண்டிருக்கும் உலோகங்கள் ஆகும். ஆனால் தங்கம் மட்டும் தான் பஞ்ச பூத சக்திக ளின் தாக்குதலு க்கு ஆட்படாமல் வென்று நிற்கும் ஒரு உலோகமாகும்.  

எனவேதான்  சித்தர்கள் இரசவாத ஆய்வினில் தாழ்ந்த நிலையில் உள்ள  உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றும் இரகசியங்களை கண்டறிந்தனர்.

சித்தர் நூல்களில் ரசவாதம் பற்றிய குறிப்புகள் எராளமாக உள்ளது.ஆனால் வெறும் புத்தக அறிவைக் கொண்டு சுயமாக முயற்சி செய்து இக்கலையில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லை.

ரசவாதம்  சித்திக்க சுட்டு சுட்டு கெட்டலைந்த்தோர் கோடி என்ற வார்த்தை யும் சித்தர் நூல்களில் குறிபிடப்பட்டுள்ளது.

பொன்,பொருள் என்ற பேராசையினால் ரசவாதக்கலையில் ஈடுபட்டால்  தோல்வியும்,விரக்தியும் மட்டுமே மிஞ்சும்

ரசவாதக்கலையில் வெற்றி பெற பிறவி ஜாதகத்தில் தகுந்த அமைப்பும்,இக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு மெய்குரு வின் துணையும் அமைந்தால் மட்டுமே இக்கலை சாத்தியமா கும்.


நன்றி !

மெய்திரு, இமயகிரி சித்தர்
சித்தர் வேதா குருகுலம்
புஷ்பக் நகர், A.M ரோடு
ஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006
தமிழ்நாடு – இந்தியா

அகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்
அகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்
திண்டுக்கல் – D.T
தமிழ்நாடு – இந்தியா

www.siddharprapanjam.org        .
செல் :98654302359095590855 - 9655688786






No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.